ரகசியம் சொல்லட்டுமா?

ஆம்பர் அல்லது நிமிளை என்பது பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகைப் பிசினாகும்.

Update: 2019-10-11 12:27 GMT
லேசாக ஒளி ஊடுருவும், கட்டியாக காணப்படும் இவற்றில் பல வகை உயிரினங்களின் மரபணுக்கள், உடல் பாகங்கள் உட்பொதிந்து சிதையாமல் கிடைத்துள்ளன. இதுபோன்று கிடைத்த தகவல்களைக் கொண்டு டைனோசர்கள் உள்ளிட்ட பழமையான உயிரினங்களின் மரபணு வடிவங்களை ஆய்வாளர்கள் சேகரித்துள்ளனர்.

ஆம்பரை பாலிஷ் செய்து அழகுப்பொருளாக பயன்படுத்தும் வழக்கம் நெடுங்காலமாக உள்ளது. இதை கழுத்தில் அணிகலனாக அணியும் வழக்கமும் இருந்துள்ளது. இந்த ஆம்பருக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்பது ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டது.

நூற்பு சக்கரத்தின் அருகே அழகுக்காக வைக்கப்பட்டிருந்த ஆம்பர், அதன் அருகில் இருந்த நூல், இறகு போன்றவற்றை கவர்ந்து இழுத்தது தெரியவந்தது. காந்தம் இரும்பை இழுக்கும். ஆனால் ஆம்பர் அருகில் உள்ள எடைகுறைந்த பொருட்களையும் இழுத்தது. இதை கிரேக்க தத்துஞானி தாலேஸ் கண்டறிந்து கூறினார். அவர் ஆம்பரை ‘அசையாத மின்சாரம்’ என்று அழைத்தார்.

ஆம்பருக்கான கிரேக்கச்சொல் ‘எலக்ட்ரான்’ என்பதாகும். இதிலிருந்துதான் மின்சாரத்தை குறிக்கும் ‘எலக்ட்ரிசிட்டி’ என்ற சொல் உருவானது. இதை உருவாக்கியவர் எலிசபெத் ராணியின் மருத்துவராக இருந்த கில்பெர்ட் என்பவர் ஆவார். ஆம்பருக்கு இழுக்கும் சக்தி இருப்பதால் அபூர்வசக்தியை கிரகித்து தங்களுக்குத் தரும் என்ற நம்பிக்கையில் பலர் இதை அணிகலனாக அணிந்தனர்.

-சஜிபிரபுமாறச்சன், சரவணந்தேரி.

மேலும் செய்திகள்