உணவு கழக நிறுவனத்தில் 330 வேலைவாய்ப்புகள்

மத்திய உணவு கழக நிறுவனத் தில் 330 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2019-10-14 06:09 GMT
இது பற்றிய விவரம் வருமாறு:-

உணவு கழக நிறுவனம் சுருக்கமாக எப்.சி.ஐ. (F.C.I) எனப்படுகிறது. மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான இதில் தற்போது மேலாளர் தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொது, டெப்போ மேலாளர், அக்கவுண்ட்ஸ், டெக்னிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இந்தி போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 330 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மண்டலம் வாரியாக வடக்கு மண்டலத்தில் 187 இடங்களும், தெற்கு மண்டலத்தில் 65 இடங்களும், மேற்கு மண்டலத்தில் 15 இடங்களும், கிழக்கு மண்டலத்தில் 37 இடங்களும், வடகிழக்கு மண்டலத்தில் 26 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-8-2019-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்தி பிரிவு மேலாளர் பணிக்கு மட்டும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ். படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 27-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.fci.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்