வானவில்: அதிக திறன் கொண்ட பவர் பேங்க்

மின்னணு பொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஆங்கர் நிறுவனம் கூடுதல் திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2019-10-16 10:11 GMT
மின்னணு பொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஆங்கர் நிறுவனம் கூடுதல் திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட இந்த பவர் பேங்கின் விலை சுமார் ரூ.1,999 ஆகும்.

இதில் ஒரே சமயத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். அல்லது ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் கேமராவை சார்ஜ் செய்யலாம்.

இதில் பவர் ஐ-கியூ தொழில்நுட்பம், வோல்டேஜ் பூஸ்ட் மற்றும் பன்முக பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன. கருப்பு நிறத்தில் கையடக்கமாக வந்துள்ள இந்த பவர் பேங்க் அனைத்து முன்னணி விற்பனையகங்களிலும் கிடைக்கும். ‘பவர்கோர் 10000’ என்ற பெயரில் வந்துள்ள இந்த பவர் பேங்க், உள்ளங்கையில் அடங்கும் அளவிற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள பவர் ஐ-கியூ தொழில்நுட்பம் மூலம் 2.4 ஆம்பியர் மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது. இது விரைவாகவும் சார்ஜ் ஆகும். ஏற்கனவே உபயோகத்தில் உள்ள பவர் பேங்க்குகளைக் காட்டிலும் இதில் விரைவாக சார்ஜ் ஆகும். இதில் பாலிமர் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. உறுதியான வடிவமைப்புக்கு ஏ.பி.எஸ். பிளாஸ்டிக் பயன்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்