அளவில் சிறியதாக இருக்கும் இந்தியர்களின் மூளை

சீனர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டவர்களின் மூளையை விட இந்தியர்களின் மூளை சிறியதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மூளையின் நீளம், அகலம், எடை இவை மூன்றிலுமே மாறுபாடு காணப்படுகிறது.

Update: 2019-11-10 07:34 GMT
ஐதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில் நுட்ப நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டு இந்திய மூளைக்கான ‘வரைவை’ உருவாக்கியுள்ளது. இது ஐ.பி.ஏ. 100 என அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வு வரையறை ஞாபக மறதிக்கு வித்திடும் அல்சைமர் மற்றும் மூளை சார்ந்த நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் என்றும் சொல்கிறார்கள்.

இந்தியர்களின் மூளை சராசரியாக 160 மி.மீட்டர் நீளமும், 130 மி.மீ அகலமும் கொண்டிருக்கிறது. ஆனால் சீனர்களுடைய மூளையின் நீளம் 175 மி.மீட்டராக இருக்கிறது. அகலம் 145 மி.மீட்டராகவும் உள்ளது. மூளை அளவில் சீனர்களுக்கு அடுத்த இடத்தை கொரிய மக்கள் பிடித்திருக்கிறார்கள்.

கொரிய மக்களின் மூளையின் நீளம் 160 மி.மீ, அகலம் 136 மி.மீ என்ற அளவில் இருக்கிறது. மூளை சார்ந்த ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பல்வேறு விதமான எம்.ஆர்.ஐ. ஸ்கேனை சேகரித்திருக்கிறார்கள்.

அதன் மூலம் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கான மூளை அட்லஸை உருவாக்கி மூளையை கண்காணித்து வருகிறார்கள். மூளை முலம் வயதை கண்டறிவதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்