கிரிசில் நிறுவனப் பங்கு லாபம் ரூ.248 கோடி

கிரிசில் நிறுவனம், செப்டம்பர் காலாண்டில், ரூ.248 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.

Update: 2019-11-11 07:09 GMT
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.249 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 5.5 சதவீதம் அதிகரித்து ரூ.479 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது கிரிசில் நிறுவனப் பங்கு ரூ.1,482.20-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.1,482.25-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,429.95-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.1,440.30-ல் நிலைகொண்டது.

மேலும் செய்திகள்