வானவில்: லெனோவாவின் புதிய வரவுகள்

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் லெனோவா நிறுவனம் வீடுகளுக்கு மிகவும் அவசியமான பொருட்களை சந்தைப்படுத்தியுள்ளது.

Update: 2019-12-11 15:43 GMT
ஸ்மார்ட் டிஸ்பிளே, ஸ்மார்ட் பல்பு, ஸ்மார்ட் கேமரா ஆகியவற்றை தற்போது லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட் டிஸ்பிளே: இது 7 அங்குல திரையைக் கொண்டது. கூகுள் அசிஸ்டென்ட் மூலம் பிற மின்னணு சாதனங்களை கட்டுப்படுத்த முடியும். வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிப்பது, குழந்தைகள் விளையாடும் அறையைக் கண்காணிப்பது மற்றும் வாசலில் வந்திருப்பவர் யார் என்பன போன்ற விவரங்கள் அறிய இந்த ஸ்மார்ட் டிஸ்பிளே மிகவும் உதவியாக இருக்கும். இதன் விலை ரூ.8,999 ஆகும்.

ஸ்மார்ட் கேமரா: இது புல் ஹெச்.டி. ரெசல்யூஷனைக் கொண்டது. இதன் மூலம் ஒரு விநாடிக்கு 30 பிரேம்களை படம் பிடிக்கும். இவை அனைத்தும் ஜேபெக் வடிவில் பதிவு செய்யப்படும். 10 மீட்டர் முதல் 20 மீட்டர் தூரம் வரையில் ஆள் நடமாட்டத்தை துல்லியமாக பதிவு செய்யும்.

இதில் மைக்ரோபோன், ஸ்பீக்கர் வசதி உள்ளதால் வீட்டுக்கு வந்திருப்பவருக்கு கதவைத் திறக்காமலேயே பதில் கூற முடியும். கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்ஸா போன்ற சாதனங்களுடன் இணைத்தும் இதைப் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட் பல்பு: இது 9 வாட் திறன் கொண்டது. 15 ஆயிரம் மணி நேரம் செயல்படக்கூடிய இதன் எடை 19 கிராம் மட்டுமே. இது 2.4 கிகாஹெர்ட்ஸ் வை-பை இணைப்பு மூலம் செயல்படக்கூடியது. இதற்கென லெனோவா நிறுவனம் உருவாக்கியுள்ள செயலி அல்லது கூகுள் அசிஸ்டென்ட், அலெக்சா தளங்களில் செயல்படக் கூடியது.

மேலும் செய்திகள்