வானவில் : ஹோண்டா ஆக்டிவா 6-ஜி

ஹோண்டா நிறுவனம் பி.எஸ் 6 தரத்தி லான ஆக்டிவா ஸ்கூட்டரில் 6-வது தலைமுறையை (6-ஜி) அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.63,912. டீலக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.65,412 ஆகும். புதிய மாடல் 110 சி.சி. திறனில் வந்துள்ளது.

Update: 2020-01-22 09:25 GMT
முந்தைய (5-ஜி) மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.7,500 அதிகமாகும். இதில் ஒற்றை சிலிண்டர் மோட்டார் உள்ளது. பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இது 7.79 ஹெச்.பி. திறனை 8,000 ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக்கூடியது. நியூட்டன் மீட்டர் டார்க் அளவு 8.79 ஆகும். இது 5,250 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படும்.

இதில் ஹோண்டா நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பமான சைலன்ட் ஸ்டார்ட் வசதி புகுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் எரிபொருள் சேமிப்பு திறன் மேம்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் டேங்க் மூடியை சாவி மூலமே திறக்கும் வசதி உள்ளிட்ட சில சிறப்பு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்