வானவில் : ரியல்மி 5 ஐ ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் மிகவும் பரிச்சயமான ரியல்மி பிராண்டில் தற்போது 5 ஐ என்ற புதிய ரக ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதில் 6.52 அங்குல தொடு திரை உள்ளது.

Update: 2020-01-22 10:48 GMT
கண்ணாடி உறுதித் தன்மைக்கு கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. இது 4 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் நினைவகத்தை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்ய வசதியாக மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதி உள்ளது.

இரட்டை சிம் உபயோகிக்க முடியும். கலர்ஸ் ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளது. மூன்று கேமராக்கள் பின்புறம் உள்ளன. இவற்றின் திறன் 24 மெகா பிக்ஸெல்லாகும். முன்புறம் 8 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது. விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. 5,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, விரைவாக சார்ஜ் ஆக 10 வாட் சார்ஜிங் வசதி ஆகியன இத்துடன் வருகிறது. இதன் விலை ரூ.8,999 ஆகும்.

மேலும் செய்திகள்