வானவில் : 3 கேமராக்களுடன் ஹானர் ஸ்மார்ட்போன்

சீனாவின் ஹூயாவெய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் தற்போது 9 எக்ஸ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.59 அங்குல புல் ஹெச்.டி. திரையைக் கொண்டது.

Update: 2020-01-22 11:19 GMT
கிரின் 710 எப் எஸ்.ஓ.சி. பிராசஸர் இதில் உள்ளது. இது 6 ஜி.பி. ரேம் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் உள்ளது. இதன் பின்புறம் 3 கேமராக்கள் உள்ளன. இதன் செயல்திறன் 48 மெகா பிக்ஸெல்லாகும்.

முன்பகுதியில் செல்பி படமெடுக்க வசதியாக 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் வசதிகொண்டது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனில் இரட்டை சிம்கார்டு போடும் வசதி உள்ளது. கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள ஸ்மார்ட்போன் 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

4 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.13,999. அடுத்த மாடல் 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விலை ரூ.16,999 ஆகும்.

மேலும் செய்திகள்