உள்நாட்டில், ஜனவரி மாதத்தில் வாகனங்கள் விற்பனை 14% குறைந்தது

உள்நாட்டில், ஜனவரி மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

Update: 2020-02-11 11:10 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

புள்ளிவிவரங்கள்

மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது வெளியி ட்டுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு:

ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட அனை த்து மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 17,39,975-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 20,19,253-ஆக இருந்தது. ஆக, விற்பனை ஏறக்குறைய 14 சதவீதம் குறைந் துள்ளது.

ஜனவரியில் 2,62,714 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,80,091-ஆக இருந்தது. ஆக, விற்பனை 6.2 சதவீதம் குறைந்து இருக்கிறது. கார்கள் விற்பனை 8 சதவீதம் சரிந்து 1,64,793-ஆக உள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் சரிவடைந்து 75,289-ஆக குறைந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 16 சதவீதம் குறைந்து (15,97,528-ல் இருந்து) 13,41,005-ஆக சரிவடைந்து இருக்கிறது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்து (10,27,766-ல் இருந்து) 8,71,886- ஆக குறைந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,39,844 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத் துடன் ஒப்பிடும்போது இது 0.29 சதவீத வளர்ச்சியாகும். அதே சமயம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை 8.3 சதவீதம் குறைந்து 42,002-ஆக இருக்கிறது.

இரு சக்கர வாகனங்கள்

இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 14 சதவீத சரிவை சந்தித்து 4,88,069 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியாவின் விற்பனை 6.63 சதவீதம் சரிந்து 3,74,114-ஆக உள்ளது. சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் விற்பனை 29 சதவீதம் குறைந்து 1,63,007-ஆக சரிவடைந்துள்ளது.

இவ்வாறு சியாம் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 

மேலும் செய்திகள்