பீ.எச்.இ.எல். லாபம் 17 சதவீதம் சரிவடைந்தது

பொதுத்துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல். நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.163 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.

Update: 2020-02-12 11:37 GMT
பொதுத்துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல். நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.163 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.196 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 23 சதவீதம் சரிந்து ரூ.5,459 கோடியாக இருக்கிறது. மொத்த செலவினம் (ரூ.7,293 கோடியில் இருந்து) ரூ.5,608 கோடியாக குறைந்துள்ளது.

நேற்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு பீ.எச்.இ.எல். நிதி நிலை முடிவுகள் வெளிவந்தன. இதன் தாக்கத்தை இன்று பங்குச்சந்தைகள் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படு கிறது.

மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது இந்நிறுவனப் பங்கு ரூ.39-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.39.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.38.25-க்கும் சென்றது. இறுதியில் ரூ.38.55-ல் நிலைகொண்டது. இது, திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.78 சதவீத சரிவாகும்.

மேலும் செய்திகள்