பஜாஜ் இந்துஸ்தான் இழப்பு குறைந்தது

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பஜாஜ் இந்துஸ்தான் சுகர் பங்கு ரூ.6.27-க்கு கைமாறியது.

Update: 2020-02-13 10:39 GMT
ர்க்கரை துறையில் முதல் இடத்தில் இருந்து வரும் பஜாஜ் இந்துஸ்தான் சுகர் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.46.35 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அதன் இழப்பு ரூ.187 கோடியாக இருந்தது. ஆக, இழப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் (ரூ.1,694 கோடியில் இருந்து) ரூ.1,727 கோடியாக உயர்ந்து இருக்கிறது. செலவினங்கள் (ரூ.1,881 கோடியில் இருந்து) ரூ.1,773 கோடியாக குறைந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பஜாஜ் இந்துஸ்தான் சுகர் பங்கு ரூ.6.27-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.6.42-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6.11-க்கும் சென்றது. இறுதியில் இப்பங்கு ரூ.6.16-ல் நிலைகொண்டது. இது முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.12 சதவீத இறக்கமாகும்.

மேலும் செய்திகள்