ரைட்ஸ் லாபம் 10 சதவீதம் வளர்ச்சி

ஆர்.ஐ.டி.இ.எஸ். நிறுவனம் (ரைட்ஸ்), மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.150 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.

Update: 2020-02-14 10:51 GMT
ஆர்.ஐ.டி.இ.எஸ். நிறுவனம் (ரைட்ஸ்), மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.150 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.136 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.583 கோடியில் இருந்து) ரூ.663 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ரைட்ஸ் நிறுவனப் பங்கு ரூ.304-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.328.50-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.317.90-ல் நிலைகொண்டது. கடந்த புதன்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 3.92 சதவீத உயர்வாகும்.

மேலும் செய்திகள்