வானவில் :ஆப்டோமா அல்ட்ரா புரொஜெக்டர்

புரொஜெக்டர் மற்றும் ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள அப்டோமா நிறுவனம் 4-கே ரெசல்யூஷனை வெளிப்படுத்தும் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2020-02-19 10:40 GMT
லேஸர் புரொஜெக்‌ஷன் தொழில்நுட்பம் கொண்டது இது . புளூடூத் இணைப்பு மூலமும் இதை செயல்படுத்தலாம். திரைக்கு மிக அருகாமையில் வைத்து இந்த புரொஜெக்டரை பயன்படுத்த முடியும். 

மிக துல்லியமாக காட்சிகளை வெளிப்படுத்துவதோடு இதனுள் வெளிச்சமும் அறையின் சூழலுக்கேற்ப மாறிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு திறன் இதற்கு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.4,99,999.

மேலும் செய்திகள்