முதல் 10 மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.9.32 லட்சம் கோடியாக குறைந்தது

நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது.

Update: 2020-02-19 10:59 GMT
டப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2019 ஏப்ரல்-2020 ஜனவரி) நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.9.32 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், சேவை துறையில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரிவில் வர்த்தக உபரி இருந்து வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி வரையிலான 10 மாதங் களில் தங்கம் இறக்குமதி 9 சதவீதம் குறைந்து ரூ.1.74 லட்சம் கோடியாக உள்ளது. அதன் காரணமாக வர்த்தக பற்றாக்குறை ரூ.9.32 லட்சம் கோடியாக குறைந்து இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.11.42 லட்சம் கோடியாக இருந்தது.

மேலும் செய்திகள்