ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 4.6% சரிவு

ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 4.6 சதவீதம் சரிவடைந்துள்ளதாக மோட்டார் வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்.ஏ.டீ.ஏ) தெரிவித்துள்ளது.

Update: 2020-02-24 11:23 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

புள்ளிவிவரங்கள்

வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

ஜனவரி மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் 17,50,166 மோட்டார் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 18,85,253-ஆக இருந்தது. ஆக, விற்பனை 7 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதே மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 4.6 சதவீதம் குறைந்து 2.90 லட்சமாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 3.04 லட்சமாக இருந்தது.

வர்த்தக வாகனங்கள் விற்பனை 6.8 சதவீதம் சரிவடைந்து 82,187-ஆக உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அது 88,271-ஆக இருந்தது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 8.8 சதவீதம் குறைந்து (13,89,951-ல் இருந்து) 12,67,366-ஆக குறைந்து இருக்கிறது.

அதே சமயம் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்து 63,514-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 58,178-ஆக இருந்தது. டிராக்டர்கள் விற்பனை 5.11 சதவீதம் உயர்ந்து 46,170-ஆக இருக்கிறது.

இவ்வாறு வாகன டீலர் சங்கங்கள் கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மாருதி சுசுகி

கடந்த பல மாதங்களாக மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. ஜனவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,39,844 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.29 சதவீத வளர்ச்சியாகும். அதே சமயம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை 8.3 சதவீதம் குறைந்து 42,002-ஆக இருக்கிறது.

மேலும் செய்திகள்