வானவில் : சாம்சங் வயர்லெஸ் பவர்பேங்க்

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய உதவும் வயர்லெஸ் பவர்பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2020-02-26 11:18 GMT
விரைவாக சார்ஜ் ஆக 25 வாட் திறன் கொண்டதாக இவை வந்துள்ளது. இவற்றில் யு.எஸ்.பி. ஏ போர்ட் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் ஆகியனவும் உள்ளன.

இதனால் ஒரே சமயத்தில் வயர்லெஸ் அடிப்படையில் ஒரு சாதனத்தையும் கூடுதலாக இரண்டு அதாவது டேப்லெட் மற்றும் கேமரா பேட்டரியையும் சார்ஜ் செய்ய முடியும். 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட இந்த பவர் சார்ஜருடன் 25 வாட் திறன் உள்ளதால் விரைவாக சார்ஜ் ஏறும். இவற்றுடன் 45 வாட் திறன் கொண்ட கார் சார்ஜரையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது 15 வாட் திறனை வெளிப்படுத்தும், ஒரு யு.எஸ்.பி. போர்ட் டைப் சி வசதி கொண்டது. இது காரிலிருந்து கிடைக்கும் 12 வோல்ட் மின்சாரத்தை 45 வாட் ஆக மாற்றி விரைவாக சார்ஜ் ஏற உதவும். சாம்சங்கின் 25 வாட் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர்பேங்க் விலை ரூ.5,712. விரைவிலேயே இது இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்