திங்கள்கிழமை வர்த்தகத்தில் உலோக துறை குறியீட்டு எண் அதிகபட்ச வீழ்ச்சி

திங்கள்கிழமை வர்த்தகத்தில் உலோகத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

Update: 2020-03-17 10:44 GMT
மும்பை

திங்கள்கிழமை வர்த்தகத்தில் உலோகத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. மும்பை பங்குச்சந்தையில் நேற்று அந்தத் துறைக்கான குறியீட்டு எண் அதிகபட்சமாக 9.30 சதவீதம் வீழ்ச்சி கண்டது. வர்த்தகம் முடிந்தபோது அந்த பங்குகளின் விலை நிலவரம் வருமாறு:-

* ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனப் பங்கு விலை 13.52 சதவீதம் குறைந்து ரூ.185.80-ஆக இருந்தது.

* டாட்டா ஸ்டீல் நிறுவனப் பங்கு 11.02 சதவீதம் சரிந்து ரூ.289.60-க்கு விலைபோனது.

* வேதாந்தா நிறுவனப் பங்கின் விலை 10.62 சதவீதம் இறங்கி ரூ.74.90-ஆக இருந்தது.

* ஜிந்தால் ஸ்டீல் நிறுவனப் பங்கு விலை 10.21 சதவீதம் வீழ்ந்து ரூ.109-க்கு கைமாறியது.

* ஹிண்டால்கோ நிறுவனப் பங்கின் விலை 9.19 சதவீதம் சரிந்து ரூ.115.55-ல் நிலைகொண்டது.

* செயில் நிறுவனப் பங்கு விலை 7.30 சதவீதம் சரிவடைந்து ரூ.27.30-ல் நிலைபெற்றது.

* கோல் இந்தியா நிறுவனப் பங்கு விலை 6.83 சதவீதம் இறங்கி ரூ.143.90-க்கு கைமாறியது.

* இந்துஸ்தான் சிங்க் நிறுவனப் பங்கின் விலை 2.76 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.137.40-ல் முடிவுற்றது.

* நேஷனல் அலுமினியம் நிறுவனப் பங்கு விலை 2.61 சதவீதம் குறைந்து ரூ.29.80-க்கு கைமாறியது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மேலும் செய்திகள்