சென்செக்ஸ் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி பங்கு விலை அதிகபட்ச சரிவு இந்துஸ்தான் யூனிலீவர் பங்கு அதிக ஏற்றம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் நேற்று ஐசிஐசிஐ வங்கி பங்கு விலை அதிகபட்ச சரிவை சந்தித்தது.

Update: 2020-03-18 10:58 GMT
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் நேற்று ஐசிஐசிஐ வங்கி பங்கு விலை அதிகபட்ச சரிவை சந்தித்தது. அதே சமயம் இந்துஸ்தான் யூனிலீவர் பங்கு அதிக ஏற்றம் கண்டது.

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கு ரூ.1,951-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.2,087.95-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,931.35-க்கும் சென்றது. இறுதியில் ரூ.2,009-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 3.49 சதவீத உயர்வாகும்.

நேற்று ஐசிஐசிஐ வங்கி பங்கு தொடக்கத்தில் ரூ.405-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.410.05-க்கும், குறைந்தபட்சமாக ரூ.364.05-க்கும் சென்றது. இறுதியில் ரூ.366.85-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 8.95 சதவீத சரிவாகும்.

மேலும் செய்திகள்