ரூ.1,700 கோடி மதிப்பிற்கான பங்குகளை வாங்க சன் பார்மா முடிவு

சன் பார்மா நிறுவனம் இப்போது ரூ.1,700 கோடி மதிப்பிற்கான தனது பங்குகளை திரும்ப வாங்க உத்தேசித்துள்ளது.

Update: 2020-03-18 11:19 GMT
ருத்துவ துறையை சேர்ந்த சன் பார்மா நிறுவனம் ரூ.1,700 கோடி மதிப்பிற்கான தனது பங்குகளை திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது.

நிறுவன உரிமையாளர்கள் பொதுவாக தமது பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள விரும்பும்போதும், மூலதன சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும்போதும் பொது சந்தையில் உள்ள பங்குகளை திரும்ப வாங்குகின்றனர். ஒரு நிறுவனப் பங்கின் விலை கடும் வீழ்ச்சி கண்டிருக்கும் நேரத்தில், அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியும் நிறுவனர்கள் பங்குகளை திரும்ப வாங்குவது உண்டு. ஒரு நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும் முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகள் திரும்ப வாங்கப்படுகின்றன.

சன் பார்மா நிறுவனம் இப்போது ரூ.1,700 கோடி மதிப்பிற்கான தனது பங்குகளை திரும்ப வாங்க உத்தேசித்துள்ளது. இதற்கு அதன் இயக்குனர்கள் குழு நேற்று ஒப்புதல் அளித்து இருக்கிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு பங்கு ரூ.425 என்ற விலையில் வாங்கப்பட உள்ளன. இப்பங்கின் நேற்றைய சந்தை நிலவரத்தை விட இது 15 சதவீதம் அதிகமாகும்.

மேலும் செய்திகள்