ரூ.194 கோடி மதிப்பிற்கு பங்குகளை திரும்ப வாங்க இமாமி நிறுவனம் முடிவு

இமாமி நிறுவனம் ரூ.194 கோடி மதிப்பிற்கு தனது பங்குகளை திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது.

Update: 2020-03-21 11:25 GMT
மாமி நிறுவனம் ரூ.194 கோடி மதிப்பிற்கு தனது பங்குகளை திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது.

நிறுவன உரிமையாளர்கள் பொதுவாக தமது பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள விரும்பும்போதும், மூலதன சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும்போதும் பொது சந்தையில் உள்ள பங்குகளை திரும்ப வாங்குகின்றனர். ஒரு நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும் முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகள் திரும்ப வாங்கப்படுகின்றன.

இமாமி நிறுவனம் இப்போது பங்கு ஒன்று ரூ.300 என்ற விலைக்கு மிகாமல் ரூ.194 கோடிக்கு பங்குகளை வாங்கப் போவதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 1.43 சதவீதமாகும். இத்திட்டத்திற்கு இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இமாமி நிறுவனப் பங்கு 6.83 சதவீதம் உயர்ந்து ரூ.184.45-ல் நிலைகொண்டது.

மேலும் செய்திகள்