வானவில் : மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மாடல் எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.7 அங்குல முழு ஹெச்.டி. ஓலெட் திரையைக் கொண்டது.

Update: 2020-05-27 01:18 GMT
ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 865 பிராசஸர்  இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது. இதன் பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கொண்ட கேமரா உள்ளது. இது லேசர் ஆட்டோ போகஸ், அல்ட்ரா வைட் ஆங்கிள், டெலி போட்டோ லென்ஸ், ஆப்டிகல் ஜூம் லென்ஸ்களைக் கொண்டது. இதன் முன்பகுதியில் 25 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. டிஸ்பிளேயில் விரல் ரேகை உணர் சென்சார் வசதி உள்ளது.

5000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியோடு 18 வாட் வயர் சார்ஜர் மற்றும் 15 வாட் வயர்லெஸ் சார்ஜரோடு இது வந்துள்ளது. அத்துடன் 5 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை நீடித்திருக்கும். கிரே வண்ணத்தில் வந்துள்ள இதன் விலை ரூ.74,999.

மேலும் செய்திகள்