ரிசர்வ் வங்கியில் வேலை; 841 அலுவலக உதவியாளர் பணி இடங்கள்

ரிசர்வ் வங்கி மூலம் பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள 841 அலுவலக உதவியாளர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Update: 2021-02-28 10:42 GMT
1-2-2021 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு அனுமதியும் உண்டு. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆன்லைன் தேர்வு, மொழி திறனறிவு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-3-2021. விண்ணப்ப நடைமுறை சார்ந்த மேலும் விரிவான விவரங்களை https://ibpsonline.ibps.in/rbirpoafeb21/  என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்