போகோ எக்ஸ் 3 புரோ

ஸ்நாப்டிராகன் 860 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இது 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் கொண்டதாக வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது.

Update: 2021-04-07 10:16 GMT
போகோ நிறுவனம் எக்ஸ் 3 புரோ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.67 அங்குல முழு ஹெச்.டி. எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஸ்நாப்டிராகன் 860 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இது 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் கொண்டதாக வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது.

இதன் பின்புறமும், பக்கவாட்டுப் பகுதிகளும் கையை விட்டு நழுவாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் 48 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. செல்பி பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முன்புறம் 20 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5160 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியும் விரைவாக சார்ஜ் ஆக 33 வாட் சார்ஜரும் இத்துடன் வழங்கப்படுகிறது. கருப்பு, நீலம், தங்க நிறங்களில் வந்துள்ளது. 6 ஜி.பி. ரேம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.18,999 ஆகவும், 8 ஜி.பி. ரேம் உள்ள மாடல் ரூ.20,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்