கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் குரூப் ஏ, குரூப் சி பணி பிரிவுகளில் 337 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Update: 2021-04-17 10:51 GMT
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் தொழில்நுட்ப அதிகாரி, அறிவியல் அதிகாரி, ஸ்டெனோகிராபர் கிரேடு 3, எழுத்தர், டிரைவர், பாதுகாவலர், உதவியாளர், கேண்டின் உதவியாளர், ஸ்டைபண்டரி டிரெயினி வகை 1, 2 உள்பட குரூப் ஏ, குரூப் சி பணி பிரிவுகளில் 337 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி இடத்தை பொறுத்து கல்வி தகுதி, வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப் படிப்பு, பிஎச்.டி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திறன் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-5-2021. விண்ணப்பிப்பது பற்றிய மேலும் விரிவான விவரங்களை www.igcar.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்