டி.சி.எல். வயர்லெஸ் இயர்போன்

டி.சி.எல். நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2021-04-22 13:38 GMT
மூவ் ஆடியோ எஸ் 150, மூவ் ஆடியோ எஸ் 200 மற்றும் ஏ.சி.டி.வி 500 என்ற பெயர்களில் இவை வந்துள்ளன. இவை அனைத்துமே புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டவை. இவற்றை ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்றரை மணி நேரம் வரை செயல்படும். 

இதில் உள்ள சார்ஜிங் கேஸில் உள்ள பேட்டரி 20 மணி நேரம் செயல் படுவதற்குத் தேவையான மின்சாரத்தை சேமித்து வைத்திருக்கும். இதில் இ.என்.சி. தொழில்நுட்பம் உள்ளதால் இது சுற்றுப்புற இரைச்சலை முற்றிலுமாகத் தவிர்த்துவிடும். மூவ் ஆடியோ எஸ் 150 விலை சுமார் ரூ.1,999. மூவ் ஆடியோ எஸ் 200 விலை சுமார் ரூ.3,999. ஏ.சி.டி.வி 500 விலை சுமார் ரூ.4,499.

மேலும் செய்திகள்