வீதியில் பூத்த மலர்கள்

வேலைகள் செய்து கொண்டும் இருக்கும் சிறார்களை பார்த்து இருப்போம். இவர்களை தெரு குழந்தைகள் என்று அழைப்பார்கள்.

Update: 2021-05-03 01:08 GMT
நாம் பயணம் செய்யும் போது வீதியின் ஓரங்களில் விளையாடி கொண்டும், வேலைகள் செய்து கொண்டும் இருக்கும் சிறார்களை பார்த்து இருப்போம். இவர்களை தெரு குழந்தைகள் என்று அழைப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை வீதிகளில் வாழ்கிறார்கள். மென்மையான உள்ளம் உடைய இந்த இளம் பிஞ்சுகள் கைகளில் தட்டுகளை ஏந்தி உணவு கிடைக்குமா என தினமும் காத்து இருக்கிறார்கள். இவர்களின் கண்ணீரை துடைத்து அச்சத்தை போக்க தாயின் அரவணைப்பு இவர்களுக்கு இல்லை. இவர்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி காண்போம்.

வீதிக்கு வருவதற்கான காரணம்

வறுமை என்பது ஒருவன் செய்யாத தவறுக்காக பெறும் தண்டனை போன்றது. இயற்கை பேரழிவுகள் பெற்றோரின் அறியாமை, வறுமை, பஞ்சம் போன்ற காரணங்களால் இவர்கள் வீதிக்கு வருகிறார்கள். அரசின் கணக்கெடுப்பில் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கான சிறார்கள் வீதியில் வாழ்கிறார்கள்.

அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள்

நாம் உண்ணும் உணவு சுவையாக இருக்கிறதா என்பதை பார்த்து நாம் உணர்கிறோம். ஆனால் தெரு குழந்தைகளில் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள். கைகளை தலையணையாகவும், காகித அட்டைகளை மெத்தையாகவும், கோணிப்பைகளை போர்வையாகவும் போர்த்திக்கொண்டும் தெரு ஓரங்களில் படுத்து அடிமையாகிறார்கள். சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாகிறார்கள். அதிக வேலை, குறைந்த பணம். இதுவே இவர்கள் வேலை செய்யும் இடங்களில் இவர்களின் நிலைமை, தூய்மை பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால் பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.

வீதிக்கு வருவதை தடுக்க வழிகள்

வறுமை என்பது கடினமானது தான். ஆனால் ஒருவருக்கு உணவு அளிப்பது என்பது கடினமானது அல்ல. இவர்களின் தேவைகளை அறிந்து அரசு இவர்களுக்கு உதவ வேண்டும். மனிதன் என்பவன் மனிதன் தான் அவன் எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தெரு குழந்தைகள் பற்றி விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்.

வறுமையில் வாழும் இவர்களின் வாழ்க்கையை மாற்ற அவர்களுக்கான சரியான கல்வி, பாதுகாப்பான சுற்றுசூழல், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க அனைவரும் இணைந்து இவர்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்.

மேலும் செய்திகள்