சுஸுகி ஹயபுஸா

சுஸுகி நிறுவனம் தனது ஹயபுஸா மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Update: 2021-05-06 05:40 GMT
இது முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.16.40 லட்சம். இது 1,340 சி.சி. திறன், நான்கு சிலிண்டர் என்ஜின் கொண்டது. இலகுரக பிஸ்டன் மற்றும் பியூயல் இன்ஜெஷன் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இது 190 ஹெச்.பி. திறனையும், 150 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது.

வாகனத்தின் எடையைக் குறைக்கும் விதமாகவும், உறுதித் தன்மைக்காகவும் இதில் அலுமினியம் பிரேம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் சக்கரம் 1,480 மி.மீ. அகலம் கொண்டது. பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் எடை 264 கி.கி. ஆகும். மூன்று ஓட்டும் நிலைகளைக் கொண்டது. லாஞ்ச் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதி, எல்.இ.டி. முகப்பு விளக்கு, டி.எப்.டி. டிஸ்பிளே வசதி கொண்டது.

மேலும் செய்திகள்