பயர்போல்ட் பீஸ்ட் ஸ்மார்ட் கடிகாரம்

இந்திய நிறுவனமான பயர்போல்ட் தற்போது பயர்போல்ட் பீஸ்ட் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2021-05-12 17:29 GMT
இதில் 1.69 அங்குல திரை உள்ளது. இது நீர் புகா தன்மை கொண்டது. உடலின் ஆக்சிஜன் அளவு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை உணர்த்தும். மேலும் ரத்த அழுத்தத்தையும் காட்டும்.

மேலும் இதய துடிப்பையும் துல்லியமாகக் காட்டும். கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் உடலில் ஆக்சிஜன் அளவு குறிப்பாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கட்டாயம் அவரவர் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு உதவும் வகையில் இந்த ஸ்மார்ட் கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் புளூடூத் 5 இணைப்பு வசதி உள்ளது. 8 வகையான விளையாட்டு களில் நீங்கள் ஈடுபட்டாலும் அதனால் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இது துல்லியமாக உணர்த்தும். உடலின் ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்கும்.

ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகள் விவரம், அதை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதற்கான வசதி, ஸ்மார்ட் போனின் கேமராவை கட்டுப்படுத்தும் வசதி, வானிலை விவரம் போன்றவைகளையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 நாட்கள் வரை நீடித்திருக்கும். இதன் விலை சுமார் ரூ.3,799.

மேலும் செய்திகள்