ஒன் பிளஸ் நார்ட் சி.இ.

ஒன் பிளஸ் நிறுவனம் தற்போது நார்ட் சி.இ. மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2021-06-09 04:04 GMT
இதில் மூன்று நிலை நினைவக வசதி உள்ளது. அதேபோல பின்புறம் 3 கேமராக்கள் உள்ளன. இதில் 6.43 அங்குல முழுஹெச்.டி. அமோலெட் திரை உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. இதில் குவால்காம் ஸ்நாப் டிராகன் 750 ஜி எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக இரண்டு மாடல்கள் வந்துள்ளன.

இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 30 டி சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.24,999.

மேலும் செய்திகள்