சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன்.

Update: 2021-07-14 13:05 GMT
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ 22 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.4 அங்குல அமோலெட் திரையைக் கொண்டு உள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 பிராசஸர் உள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இதை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதி உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டது. இதன் பின்புறம் 48 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 15 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதனால் விரைவாக சார்ஜ் ஆகும். இதன் விலை சுமார் ரூ.18,499.

மேலும் செய்திகள்