உலக எழுத்தறிவு நாள்

கல்வியறிவின் அடிப்படையாக எழுத்தறிவு பார்க்கப்படுகிறது.

Update: 2021-09-06 07:45 GMT
கல்வியறிவின் அடிப்படையாக எழுத்தறிவு பார்க்கப்படுகிறது. உலகம் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுவிட்டபோதிலும் கூட உலக அளவில் இன்னும் 780 மில்லியன் பேர், அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களாக இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு சொல்கிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் என்பது வருத்தத்திற்குரியது.

இந்த அடிப்படை எழுத்தறிவு இல்லாததற்கு, அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. உலகில் 103 மில்லியன் சிறுவர், சிறுமியர்கள், பள்ளிக்கூட வசதி இன்றி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

2006 அறிக்கைப்படி உலக அளவில் எழுத்தறிவு இல்லாதவர் களின் எண்ணிக்கையில் தெற்கு மற்றும் மேற்கு ஆசியாதான் முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்ததாக ஆப்பிரிக்கா இருக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், சமூக அமைப்புகளுக்கும் அறியவைப்பதன் நோக்கமாகவே ‘உலக எழுத்தறிவு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

1966-ம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் செப்டம்பர் 8-ந் தேதியை, இதற்கான நாளாக அறிவித்து, உலகம் முழுவதும் எழுத்தறிவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகள்