பறவைகளை ஆராய்ந்த ஆங்கிலேயர்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பறவைகள், உயிரினங்கள் பற்றி முழுமையான மதிப்பீட்டை களப்பணி மூலம் செய்திருக்கிறார்கள். இது மட்டுமின்றி புள்ளினங்களையும் விலங்குகளையும் கவனித்து அவற்றின் இயல்புகளை, செயல்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-09-21 14:26 GMT
இந்திய பறவைகளை பற்றி அறிய விரும்புவோர் திவார், இஹா, பின், விஸ்லர், பிளட்சர், இங்லிஸ் போன்ற ஆங்கிலேய அதிகாரிகளைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது. இதில் சிலர் ஐ.சி.எஸ். போன்ற உயர்பதவிகளில் இருந்தவர்கள். அவர்களுடைய அலுவலகப் பணிக்கும் பறவைகளிடம் அவர்கள் காட்டிய ஆர்வத்துக்கும் சம்பந்தமே இல்லை. என்றாலும் இதில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

காட்டு விலங்குகளை பற்றி அறிய வேண்டும் என்றாலும் இதேவழிதான். அவற்றின் வாழிடங்கள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும் கவனித்துத் துல்லியமாக பதிவுசெய்ததும் உயர் பதவிகளில் இருந்த ஆங்கிலேயர்கள்தாம். பிரிட்டிஷ் அரசின் பணியில் இல்லாமல், காட்டுயிர் பற்றி பல அரிய குறிப்புகளை எழுதியவர் ஜி.பி.சாண்டர்சன். இவர் மைசூர் சமஸ்தானத்தில் வேலையில் இருந்தார். இந்தியாவில் வேலை பார்த்த சில ஆங்கிலேயே அதிகாரிகள் தங்களது ஓய்வு நேரத்தில் காட்டுயிர்களைப் பற்றி எழுதி இருக்காவிட்டால், வேட்டைக்காரர்கள் திரித்த கட்டுக்கதைகள்தான் நமக்கு எஞ்சியிருக்கும் என்கிறார்கள், வனவியல் ஆர்வலர்கள்.

மேலும் செய்திகள்