ஜியோமியின் ஸ்மார்ட் கண்ணாடி

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜியோமி நிறுவனம் ஸ்மார்ட் மூக்குக் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2021-09-23 14:15 GMT
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இந்த கண்ணாடி மூலம் புகைப்படம் எடுக்கலாம், தகவல்களை மொழிமாற்றம் செய்து படிக்கலாம், ஸ்மார்ட்போனுக்கு அழைப்பு மேற்கொள்ளலாம். 

இது வழக்கமான கண்ணாடியைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மைக்ரோ எல்.இ.டி. ஆப்டிகல் வேவ் கைடு தொழில்நுட்பம் உள்ளது. இது திரையில் எழுத்துகள், அறிவிப்புகள் தோன்ற உதவுகிறது. பார்க்கும் காட்சிகளை புகைப்படம் எடுக்க உதவுகிறது. 

இதன் எடை 51 கிராம். புகைப்படம் எடுக்கும் வசதி இருப்பதால் இதில் பார்க்கும் காட்சிகள் மட்டுமின்றி படிக்கும் புத்தக பக்கங்களையும் புகைப்படம் எடுக்க முடியும்.

மேலும் செய்திகள்