இதய நோய்களை தடுக்கும் வேர்க்கடலை

வேர்க்கடலை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில், அதனை சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் அல்லது இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவு என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-11-30 16:04 GMT
‘‘உணவு பட்டியலில் தினமும் சராசரியாக 4-5 வேர்க்கடலைகளை சேர்ப்பது ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’கை தடுக்க உதவும் என்று எங்கள் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன’’ என்கிறார், ஆராய்ச்சியாளர், இகேஹாரா. இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என்பது மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு அல்லது ரத்தம் உறைவது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் பக்கவாதமாகும்.

‘‘ஆசியாவில் ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அங்கு வேர்க்கடலை நுகர்வு அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என்பதை கண்டறிந்தோம்.

வேர்க்கடலையில் இதய ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு போன்ற ஆபத்து காரணிகளைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களில் இருந்து காக்கின்றன’’ என்கிறார்.

அமெரிக்க இதய அசோசியேஷனின் ஒரு பிரிவான அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷன் இதழான ‘ஸ்ட்ரோக்’ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்