மரக்கழிவில் உருவாகும் மகத்தான பொருட்கள்

மரக்கழிவில் இருந்து நீர் மற்றும் தீயில் சேதம் அடையாத மரப்பொருட்களை உருவாக்கி அசத்தி வருகிறார், ஆக்ரிதி குமார்.;

Update:2022-10-09 18:03 IST

''பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டதற்கு மரங்களுக்கும் பங்கு உண்டு. வனங்கள் அழிக்கப்படுவதுதான் அதற்கு காரணம். ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் டன் மரக்கழிவுகள் நிலத்தில் கொட்டப்படுகின்றன. இவை யாராலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்'' என்கிறார்.

இந்நிலையில், பெரிய அளவிலான மரத்துண்டுகள் வீணாகி வருவதை ஆக்ரிதி குமார் கவனித்தார். டெல்லியை சேர்ந்த கலை வடிவமைப்பாளரான இவர் வீணாகும் மரக்கழிவுகளை கொண்டு விதவிதமான கலை பொருட்களை உருவாக்குகிறார்.

மரக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது சுற்றுச்சூழலுக்கு பெரும் நன்மையை தரும் என்றும் சொல்கிறார். "குப்பையில் எறியப்பட்ட மரத்துண்டை பயன்படுத்தி 2014-ம் ஆண்டு முதல் முறையாக காபி டேபிளை தயாரித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து மரப்பொருட்களை உருவாக்கும் ஆவலை தூண்டியது.

நாற்காலிகள், டேபிள்கள், சோபாக்கள், குழந்தைகளுக்கான கலை பொருட்கள் போன்றவற்றை தயாரித்தேன். டெல்லியில் மரக்கழிவுகளை ஏலத்தில் எடுத்து இந்த பொருட்களை தயாரித்து கொண்டிருக்கிறேன்'' என்று செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்