நாய்ஸ் பட்ஸ் வி.எஸ் 404

ஆடியோ மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் பட்ஸ் வி.எஸ் 404 என்ற பெயரிலான புதிய வயர்லெஸ் இயர் போனை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-02-23 20:03 IST

இ.என்.சி. தொழில்நுட்பத்திலான குவாட் மைக்ரோபோன் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மூன்று விதமான தேர்வு நிலைகள் (பாஸ், கேமிங் மற்றும் வழக்கமான உரையாடலுக்கு) உள்ளன. இவற்றை உபயோகத்திற்கேற்ப தேர்வு செய்துகொள்ள முடியும். புளூடூத் வி 5.3 இணைப்பு வசதி உள்ளது. இதில் தொடர்ந்து 50 மணி நேரம் செயல்படும் தொழில்நுட்பம் உள்ளது. 10 நிமிடம் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரம் செயல்படும். யு.எஸ்.டி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது. கருப்பு, பச்சை, வெள்ளை ஆகிய கண்கவர் நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,499.

Tags:    

மேலும் செய்திகள்