என்கோ ஏர் 3 இயர்போன்
ஓப்போ நிறுவனம் புதிதாக என்கோ ஏர் 3 என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.;
இதன் விலை சுமார் ரூ.2,999. பாலிமர் கூட்டு சேர்க்கையால் மிக அழகாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸும் மிக அற்புதமாக வெள்ளை நிறத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. சுற்றுப்புற இரைச்சல் தவிர்ப்பு நுட்பம் கொண்டது.
தூசி மற்றும் தண்ணீர் புகாத தன்மை கொண்டது. இதன் எடை தலா 3.75 கிராம் மட்டுமே. இது 6 மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் 25 மணி நேரம் இயங்குவதற்குத் தேவையான மின்சாரம் சேமிக்கப்பட்டிருக்கும். 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே இது 2 மணி நேரம் செயல்படும்.