சாம்சங் கேலக்ஸி புக் 3 சீரிஸ் லேப்டாப்
மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சீரிஸில் புக் 3 ரக லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.;
கேலக்ஸி புக் 3 அல்ட்ரா, கேலக்ஸி புக் 3 புரோ 360 மற்றும் கேலக்ஸி புக் 3 புரோ என்ற பெயரில் மூன்று மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. பன்முக செயல்பாடுகள் மற்றும் பன்முக இணைப்பு வசதிகள் தேவைப்படுவோருக்கு இது மிகவும் ஏற்றதாகும். இதில் 13-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 9 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிவிட்யா ஆர்.டி.எக்ஸ். ஜி.இ-போர்ஸ் 4070 உள்ளது. இதில் அமோலெட் 2 எக்ஸ் திரை உள்ளது. இது 3-கே ரெசல்யூஷனில் காட்சிகள் தெளிவாகத் தெரிய வழிவகுக்கும். இதன் மேல்பாகம் உறுதியான அலுமினிய பிரேமைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதில் பெருமளவு மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை 14 அங்குலம் முதல் 16 அங்குல திரையைக் கொண்டுள்ள மாடல்களாக வந்துள்ளன. இவற்றின் விலை சுமார் ரூ.1,31,990 முதல் சுமார் ரூ.2,81,990 வரை உள்ளன.