சோனி எப்.எக்ஸ் 30 சூப்பர் கேமரா

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனம் திரைப்படங்களுக்கு இணையாக காட்சிகளை பதிவு செய்யும் திறன் கொண்ட எப்.எக்ஸ் 30 என்ற பெயரில் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-03-09 18:00 IST

தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ படம் எடுப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான நுட்பமான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

திரைப்படக் காட்சிகளுக்கு நிகராக வீடியோ காட்சிகளை பதிவு செய்ய இதில் சினி இ.ஐ., சினி இ.ஐ. குயிக் மற்றும் பிளெக்சிபிள் ஐ.எஸ்.ஓ. ஆகிய தேர்வு நிலைகள் உள்ளன. 4-கே ரெசல்யூஷனில் படக்காட்சிகள் இதில் பதிவாகும். இதில் 6-கே ரெசல்யூஷன் வரை படங்களை பதிவு செய்ய முடியும். நிகழ் நிலை டிராக்கிக், நிகழ்நிலை ஆட்டோ போகஸ், விரிவான ஆட்டோ போகஸ் வசதி, ஆட்டோ போகஸ் உதவி உள்ளிட்ட வசதிகள் கொண்டது. இதில் இரண்டு நினைவக வசதி உள்ளது. இதனால் அதிக அளவிலான படக்காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவு செய்ய முடியும். எளிதில் சூடேறாத வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.

இதன் மேல்பகுதி மக்னீசியம் அலாய் உலோகத்தால் ஆனது. இதில் எக்ஸ்.எல்.ஆர். ஹேண்டில் உள்ளதால் அதில் மைக்கை சொருகி ஆடியோ பின்னணியுடன் காட்சிகளை பதிவு செய்யலாம். இதன் விலை சுமார் ரூ.1,99,990.

Tags:    

மேலும் செய்திகள்