ஸ்டப்கூல் அல்ட்ரா பவர் பேங்க்
ஸ்டப்கூல் நிறுவனம் சிறிய அளவிலான பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது.;
உள்ளங்கையில் அடங்கும் வகையில் சிறிய வடிவமைப்பைக் கொண்டது. டைப் சி இணைப்பு, 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன் கொண்டது. நீளம் 8 செ.மீ. அளவிலும் , அகலம் 6 செ.மீ. அளவிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 20 வாட் திறன் கொண்ட மின்னணு சாதனத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் விரைவாக சார்ஜ் ஆகும். எளிதில் தீப்பற்றாத தன்மை கொண்டது. இதன் எடை 200 கிராம். மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.2,999.