டெக்னோ வை-பை ஹாட் ஸ்பாட்

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் டெக்னோ நிறுவனம் எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான போர்டபிள் வை-பை ஹாட்ஸ்பாட்டை டி.ஆர் 109 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-01-12 21:56 IST

நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 3 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 7 நாட்கள் வரை நிலைத்திருக்கும். இதன் மூலம் ஒரே சமயத்தில் 16 இணைப்புகளைப் பெற முடியும். இது எடை குறைவானது. வை-பை இணைப்புக்கு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இது 300 எம்.பி.பி.எஸ். வரையில் விரைவாக தகவல்களைக் கடத்தும்.

இது நான்காம் தலைமுறை பிரிவில் செயல் படுவதாகும். செயலி மூலம் இதை இயக்கலாம். இதன் எடை 110 கிராம் மட்டுமே. வெள்ளை நிறத்தில் வந்துள்ள ஹாட்ஸ்பாட்டின் விலை சுமார் ரூ.2,499.

Tags:    

மேலும் செய்திகள்