அமைந்தகரையில் பிரிந்து சென்ற மனைவியிடம் தகராறு; கணவன் கைது

அமைந்தகரையில் பிரிந்து சென்ற மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-11-16 09:18 IST

அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 28). இவரது மனைவி விஜயலட்சுமி. இருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீதருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விஜயலட்சுமி கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அமைந்தகரை அருகே நேற்று விஜயலட்சுமி நடந்து சென்றபோது, அங்கு வந்த ஸ்ரீதர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயலட்சுமி அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்