மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம் நடைபெற்றது.

Update: 2023-02-19 12:46 GMT

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி 4 காலபூஜைகள் மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு 3 யாக சாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு முதற்கால சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு 2-ம் கால அபிஷேகம் சிறப்புப் பூஜை, 1,008 சங்காபிஷேகமும் 11 மணிக்கு மூலவருக்கு 3-ம் கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்க அருள்பாலித்தார்.

சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்