நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

தியாகதுருகம் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.;

Update:2022-11-29 00:15 IST

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பிரசித்திபெற்ற நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தங்கதுரை சுவாமிகள் தலைமையில் அடியார்கள் கலந்து கொண்டு காலை 7 மணிக்கு அம்மையப்பர் யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து சாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்