தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

13-வது தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது.

Update: 2022-09-19 20:32 GMT

துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சியில் 13-வது தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு, 12 வயது முதல் 16 வயது வரை ஒரு பிரிவும், 16 வயது முதல் 18 வயது வரை ஒரு பிரிவும், 18 வயது முதல் 25 வயது வரை ஒரு பிரிவும், 25 வயது முதல் 45 வயது வரை ஒரு பிரிவும், 45 வயது முதல் 60 வயது வரை ஒரு பிரிவும் என 5 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெறுகிறது.

1,100 பேர் பங்கேற்பு

மேலும் 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டி வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,100 பேர் பங்கேற்க உள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சியில் ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர்செல்வன், பொருளாளர் சிராஜூதீன், நிர்வாகக்குழு உறுப்பினர் இளமுருகன், கிளப் தலைமை அதிகாரி சந்திரமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்