சிதம்பரம் கும்பாபிஷேக விழாவில் 19 பவுன் நகை பறிப்பு

சிதம்பரம் கும்பாபிஷேக விழாவில் 19 பவுன் நகையை பறித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-06-05 22:58 IST

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் சி.கொத்தங்குடி பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை நகர் கோவிந்தசாமி நகரை சேர்ந்த ஜானகி (வயது 70) என்பவரிடம் 5 பவுன் நகை, சிவபுரி வடபாதி தெருவை சேர்ந்த லட்சுமியிடம் (45) 2 பவுன் நகை, முத்தையா நகர் பாரதி சாலையை சேர்ந்த சந்திரோதயம் (54) என்பவரிடம் 12 பவுன் தங்க சங்கலி ஆகியவற்றை மர்ம நபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பறித்து சென்று விட்டனர். இதுகுறித்த புகார்களின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்