ஒரே நாளில் 19 ரவுடிகள் அதிரடி கைது
நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஒரே நாளில் 19 ரவுடிகளை கைது செய்தனர்.;
நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஒரே நாளில் 19 ரவுடிகளை கைது செய்தனர்.
தொடர் கொலைகள்
நெல்லை மாவட்டத்தில் ஒரு மாத காலத்தில் மட்டும் 10 கொலைகள் நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடி செயல்பாட்டில் உள்ளவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இது பழைய குற்றவாளிகள், கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்கள் என பல்வேறு வகைகளில் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
19 ரவுடிகள் அதிரடி கைது
இதை தொடர்ந்து ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். நேற்று ஒரே நாளில் 19 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து இடங்களிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.