ரெயில்களில் மது கடத்திய 2 பேர் கைது

திண்டுக்கல்லில் ரெயில்களில் மது கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-10-22 00:15 IST

திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் திண்டுக்கல் வழியாக சென்ற ரெயில்களில் சோதனை நடத்தினர். அப்போது தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சந்தேகப்படும் வகையில் பையுடன் பயணித்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 44) என்பதும், 12 மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததோடு, மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


அதேபோல் மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபானம் கடத்தி வந்த சிங்கம்புணரியை சேர்ந்த மாரிசெல்வம் (44) என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்