2 சிறுவர்கள், பெற்றோருடன் வீடு திரும்பினர்

கூடலூர் அருகே மாயமான 2 சிறுவர்கள், பெற்றோருடன் வீடு திரும்பினர்.

Update: 2023-09-02 22:45 GMT

கூடலூர்

கூடலூர் அருகே ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் காலன். இவருடைய மனைவி ஷைலா. இவர்களுக்கு ஸ்ரீநந்து (வயது 10) என்ற மகனும், நந்தினி (5) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி காலன், ஷைலா உள்பட சிலர் முதுமலை வனப்பகுதிக்குள் தேன், கிழங்குகள் சேகரிக்க சென்றனர். இதனால் அவர்கள் சிறுவர்களை வீட்டில் விட்டு சென்றனர். இதற்கிடையே வீட்டில் இருந்த சிறுவர்களை காணவில்லை என ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால், சிறுவர்களை காணவில்லை. இதனால் பெற்றோரை தேடி சிறுவர்கள் வனப்பகுதிக்குள் சென்று மாயமாகி இருக்கலாம் என கருதப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் கடந்த 4 நாட்களாக முதுமலை வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று காலன், ஷைலா, சிறுவர்கள் ஸ்ரீநந்து, நந்தினி ஆகியோர் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். அப்போது காலன் போலீசாரிடம், 29-ந் தேதி காலையில் வனப்பகுதிக்குள் சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்து சிறுவர்களை அழைத்துச் சென்றதாகவும், அப்போது உறவினர் ஒருவரிடம் தகவல் தெரிவித்து விட்டு சென்றேன். ஆனால், தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்